ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) ஏற்பாடு செய்த "எல் நினோவும் இலங்கையில் அதன் தாக்கங்களும்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு" எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கு கடந்த 24 ஒக்டோபர் 2026 சனிக்கிழமை மாலை 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை Zoom ஊடாக இடம்பெற்றது.
 
காலநிலை மாற்றம் மற்றும் காலநிலைத் தகவமைப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றவரும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் தொழில்நுட்பத்திற்கான அறக்கட்டளையின் (FECT) முதன்மை விஞ்ஞானியும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நீர் மையத்துடன் இணைந்து பணியாற்றுபவரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளருமான கலாநிதி Lareef Zubair (Ph.D., C.Eng.) இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்.
 
இந்நிகழ்வில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுடைவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
 
எல் நினோ காலநிலை நிகழ்வு இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அது குறித்து பொதுமக்களுக்குத் துல்லியமான விழிப்புணர்வை ஊடகங்கள் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்த பெறுமதியான தகவல்களையும் வழிகாட்டல்களையும் இக்கருத்தரங்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.