ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள விசேட வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு அமைப்பின் தலைவர் எம்.பீ.எம்.பைறூஸ் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

முதல் அமர்வில் இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் கலாநிதி செமி லுத்ஃபு துர்குத் பிரதம அதிதியாக கலந்து கொள்வதோடு முன்னாள் தூதுவரும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான பி.எம். அம்ஸா சிறப்புப் பேச்சாளராக பங்கேற்கவுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார கௌரவ அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார்.

இதன்போது அமைப்பின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதோடு, அடுத்த தலைமுறை ஊடகவியலாளர் பயிற்சித் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். அத்தோடு மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு, செய்தி மடல் வெளியீடு, மறைந்த உறுப்பினர்களின் நினைவேந்தல் என்பனவும் இடம்பெறவுள்ளன.
 
அங்கத்தவர்களுக்கு மாத்திரமான இரண்டாவது அமர்வில் அமைப்பின் யாப்புத் திருத்தம் மற்றும் ஒன்றுகூடல் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.