Events
8 Photos
SLMMF 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும் 2025 செப்டம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி விசேட அதிதியாக பங்கேற்றிருந்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் பங்கேற்றனர்.